பொதுக்கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் தராத வாலிபர் அடித்துக்கொலை..!

மும்பையில் தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பொதுக்கழிவறை ஒன்று உள்ளது. இதனை விஷ்வஜித் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் பவார் என்ற நபர் நேற்றிரவு அந்த கழிவறையை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது, அங்கிருந்த விஷ்வஜித் கழிவறையை பயன்படுத்தியதற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, பணம் கொடுக்க மறுத்த ராகுல் பவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ராகுல் பவன் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு விஷ்வஜித்தை தாக்க முற்பட்டுள்ளார். பதிலுக்கு விஷ்வஜித் அருகில் இருந்த மரக்கட்டையை கொண்டு ராகுலை தாக்கியுள்ளார்.

இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்வஜித்தை கைது செய்தனர்.