காலங்கள் செல்ல செல்ல, பொதுமக்கள் வித்தியாசமான உணவுகளை சுவைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய சிலர் காத்திருக்கிறார்கள்.
இதனை புரிந்துக்கொள்ளும் சிலர், வித்தியாசமான உணவுகளை சமைக்கிறேன் என்று பெயரில், சமந்தமே இல்லாத காம்பினேஷனில், சமைத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாகியுள்ளன.
ஆனால், தற்போது நாம் பார்க்க உள்ள நபர், அவர்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார் என்று தான் கூற வேண்டும். அதாவது, இந்த நபர் டீசல் பரோட்டா என்ற புதிய உணவு வகை ஒன்றை சமைத்து, விற்பனை செய்து வருகிறார்.
இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால், தவாவை சூடுபடுத்திய பிறகு, வட்டமாக உருட்டப்பட்ட மைதா மாவை தவாவில் போடுகிறார். அதன்பிறகு, அந்த மைதாவின் மீது டீசலை ஊற்றி, அதனை நன்றாக கருகவிட்டு, டீசல் பரோட்டா என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்.
இதுதொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தங்களது அதிர்ச்சி கலந்த கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து கேன்சர் டாக்டர் என்ற எக்ஸ் வலைதள கணக்கு, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “அடுத்து என்ன? ஹார்பிக் பரோட்டாவா? Whey Protein என்ற சத்து பவுடரை தவிர்க்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கூறும்போது, FSSAI மசாலா பொருட்களில், எத்திலென் ஆக்ஸைடு குறித்து எந்தவொரு கவலையும் கொள்ளவில்லை. நம்மால் என்ன சொல்ல முடியும். உலகத்தின் புற்றுநோய் தலைநகராக இந்தியா இருப்பதில், எந்தவொரு ஆச்சரியமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த டீசல் பரோட்டாவை விற்பனை செய்யும் நபர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.