கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி..

ஒடிசா மாநிலம் கட்டிகுடா பகுதியில் உள்ள ஜெகன்நாத்பூர் கிராமத்தை சேர்ந்த பெண், கர்ப்பிணியாக உள்ளார். இவர், மருத்துவ பரிசோதனை செய்வதற்கு உதவி கேட்டு, தனது உறவினரான பத்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த பத்மாவின் கணவர், கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை பார்த்த பத்மா, தனது கணவரை தடுக்காமல், பாலியல் வன்கொடுமை செய்வதை, வீடியோவாக பதிவு செய்துள்ளார். இப்படி பல கொடுமைகளை அந்த கர்ப்பிணி பெண் சந்தித்த நிலையில், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், தனிப்பட்ட குடும்ப பகை காரணமாக தான், அந்த பெண்ணை பத்மாவின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பதும், அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களிலும், பரவவிட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. தற்போது, அவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.