பொது இடத்தில் அநாகரிகமாகவோ, ஆபாசமாகவோ நடந்துக் கொள்வது என்பது சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு சிலர் நடந்துக் கொள்ளும்போது, அதனை வீடியோ எடுக்கும் நெட்டிசன்கள், இணையத்தில் வெளியிட்டு, நடவடிக்கைக் எடுக்கக்கோரி பதிவிடுவது வழக்கம்.
அவ்வாறு, நெட்டிசன் ஒருவர், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் என்ன இருந்தது, இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்று கலிகா ஹாவேலி. இந்த உணவகத்தின் முன்பு, கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே, ஒரு ஆண், இரண்டு பெண்களுடன், நெருக்கமாக இருந்துள்ளார்.
இதனை பார்த்த நபர் ஒருவர், அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், வீடியோவை வெளியிட்ட நபர், காவல்துறையின் நடவடிக்கை தேவை என்றும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ பலரது கவனத்திற்கு சென்றதையடுத்து, தற்போது, காவல்துறையினர் இந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ளனர். புகாரின்பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரின் நம்பர் ப்ளேட்டை வைத்து பார்க்கும்போது, ரேபரேலி மாவட்டத்திற்கான பதிவெண் கொண்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உண்மையின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் என்றும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.