11000 வால்ட் மின்சாரம் – ஒயரை பிடித்து தொங்கி சாகசம் செய்த இளைஞர்

உத்திரபிரதேச மாநிலம் பில்லிபிட்டில் உள்ள அமாரியா பகுதியை சேர்ந்தவர் நவுசத். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அங்குள்ள மார்கெட் ஒன்றிற்கு, கடந்த 24-ஆம் தேதி அன்று வந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்த கடையின் மேற்கூரை மீது ஏறிய அவர், அதற்கு மேல் இருந்த எலக்ட்ரிக் ஒயர்களில் தொங்கி, சாகசம் செய்துள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் பெய்திருந்த கனமழையின் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால், எந்த பாதிப்பும் இன்று உயிர் பிழைத்தார்.

இதையடுத்து, அங்கு வந்த சிலர், நவுசத்தை மீட்டு, கீழே கொண்டு வந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வௌியாகி, பார்ப்பவரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.