சினிமாவில் மட்டும் தான் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் நடக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒருசிலரின் வாழ்க்கையில், சினிமாவை காட்டிலும் வழக்கத்திற்கு மாறான சில நிகழ்வுகள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.
அப்படியான நிகழ்வு ஒன்றை, இணையதளவாசி ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, 28 வயதான ஓரிணச்சேர்க்கையாளர், அதே வயதுடைய இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
சில மாதங்களில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று, இருவரும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, ancestry என்ற வலைதளத்தில், DNA Kit ஒன்றை வாங்கி, பரிசோதனை செய்துள்ளனர்.
அந்த பரிசோதனையின் முடிவில், தன்னுடைய காதலன், தனக்கு மரபுவழி சகோதரன் என்று தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது சோகத்தை, Reddit என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.