ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம், இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பழக்கத்தில் மூழ்கும் இளைஞர்களுக்கு, நிஜ வாழ்க்கையில் உடலுறவு எப்படி இருக்கிறது என்ற எதார்த்த நிலை தெரிவதில்லை.
இதனால், தங்களது கற்பனைகளை வளர்த்துக் கொண்டு, தங்களது துணையிடம் செல்லும்போது, அது பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, அப்படியான சம்பவம் ஒன்று தான் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த கிஷோர். 35 வயதான இவருக்கு, காஜல் என்ற 25 வயதுடைய மனைவி உள்ளார். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர்கள், தங்களது வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பித்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, இவர்கள் இருவருக்கும் இடையே, தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
அதாவது, ஆபாச படங்கள் பார்த்து, அதில் நடப்பவை போன்று, நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்யும் பழக்கம் கிஷோருக்கு இருந்துள்ளது. இதனால், இயற்கைக்கு மாறான முறையில், மனைவியிடம் உடலுறவு கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று கிஷோர் வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துள்ளார். இதனை பார்த்த காஜல், தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டு, சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவியை உயிருடன் எரித்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கிஷோரை கைது செய்தனர்.