Connect with us

Raj News Tamil

ஆங்கில மொழிக்கு செல்லும் சிம்பு திரைப்படம்!

சினிமா

ஆங்கில மொழிக்கு செல்லும் சிம்பு திரைப்படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று ரிலீஸான இந்த திரைப்படம், டைம் லூப் என்ற புதிய கதைக் களத்தை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த புதிய கான்செப்ட் ரசிகர்களை ஈர்த்ததால், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால், இப்படத்தை, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், படக்குழுவினர் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை, தற்போது ஆங்கில மொழியில் டப்பிங் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top