விரைவில் உருவாகும் மாண்டஸ் புயல் : தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

வரும் 8ஆம் தேதி மாலை வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிக்கு புயல் வர உள்ளது. இந்த புயலுக்கு “மாண்டஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தழுவி வந்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கும், டிசம்பர் 9ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

today tamil news

டிசம்பர் 7ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை தொடங்கும்.அதன் பிறகு திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை டிசம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.