மாண்டஸ் புயல் : கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

மாண்டஸ் புயலானது புதுச்சேரிக்கும் ஹரி கோட்டாக்கும் இடையே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்தவர்கள் 40 பேரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

மழை மற்றும் புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்யும் பணியில் 26 குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் உள்ளனர்.

223 பாதுகாப்பு மையங்களில் 80 ஆயிரம் பேர் தங்கக் கூடிய அளவிற்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதை கண்காணிக்க 14 பிளாக்குகளிலும் ஜோனல் ஆபிஸர்கள் அங்கேயே முகாமிட்டு தங்கி உள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் 850 மெட்ரிக் டன் அரிசி இருப்பில் உள்ளது.

கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த 250 மரம் அறுக்கும் இயந்திரம் 250 ஜென்செட் மின் இணைப்புகள் 400 ஜேசிபி என தயார் நிலையில் உள்ளது.

அரசு பணியில் இருப்பவர்கள் கனமழையை எதிர்கொள்ள மூன்று நாட்கள் விடுமுறை இல்லாமல் பணியில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.