எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவல், அதே பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதன்காரணமாக, இந்த படத்திற்கான டிக்கெட்டை பெரும் அளவில் உயர்த்தி, லாபம் பார்க்கலாம் என்று பலர் நினைத்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக, மும்பை சென்றிருந்தார்.
அங்கு, திரையரங்க உரிமையாளர்களை சந்தித்துள்ள அவர், பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
பெரும்பான்மையான பாலிவுட் படங்கள் தோல்வியை சந்தித்ததற்கு, டிக்கெட் விலையும் ஒரு காரணம் என்பதால் தான், மணிரத்னம் இப்படியான முடிவை எடுத்துள்ளாராம்.