மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மாநிலம் முழுவதும் பரவிய இந்த கலவரத்தால் 120 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து மணிப்பூர் கவர்னர் அனுசியாவை இன்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.