மணிப்பூரில் மாநிலத்தில் உள்ள மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருதரப்பும் தங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் முன்வைத்து மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது போராட்டக்காரர்களால், மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அம்மாநில கவர்னர் அதிரடி உத்தரவை எடுத்துள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.