மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியது.

இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் பைரன் சிங் ஆட்சியை கலைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.