மணிப்பூர் அழுகிறது, ஹரியாணா அழுகிறது, உத்தரப்பிரதேசம் அழுகிறது, ஜம்மு காஷ்மீர் அழுகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
அவர் பேசியதாவது:- “நினைவில் கொள்ளுங்கள், நாம் இன்று சுதந்திரமாக இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 – ம் தேதி செங்கோட்டையில் இந்திய கூட்டணியால் தேசியக் கொடியை ஏற்றி, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்ற முழக்கங்களுடன் தேசத்தைக் காப்போம் என்று நள்ளிரவில் உறுதி ஏற்போம்.
மக்களின் ஆசியுடன் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் நாற்காலிக்கு நான் முயற்சி செய்யவில்லை. வங்காளத்திற்கு பிரதமர் நாற்காலி வேண்டாம்” என்று மம்தா கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்,” ஜனநாயகத்தின் பெயரால் உண்மையான சுதந்திரமான அரசாங்கத்தை நிறுவுவோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் இருந்தபோதிலும், நாங்கள் இப்போது உண்மையில் சுதந்திரமாக இல்லை. அவர்கள் (பாஜகவினர்) இன்று காந்திஜியைப் பற்றி பேசவில்லை. ஆனால், அவரைக் கொலை செய்தவர்களைப் பற்றி பேசுகிறார்கள்.
மணிப்பூர் அழுகிறது, ஹரியாணா அழுகிறது, உத்தரப்பிரதேசம் அழுகிறது, ஜம்மு காஷ்மீர் அழுகிறது. இந்த நிலையில் சுதந்திர தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் எப்படி பெருமிதம் கொள்வது?” என்று மம்தா கேள்வி எழுப்பினார்.