மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மைத்தேயி இனத்தவர் எஸ்டி அந்தஸ்து கோரிக்கைக்கு குகி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் மூண்டது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த வன்முறை பாதுகாப்பு படையினரின் கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு சற்று ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய கலவரம் நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் காலை 8.20-க்கு நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.