மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. இந்த மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியால் இந்த இனமோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தவித்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.