மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் : சமாஜ்வாடி கட்சி முன்னிலை

உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சமீபத்தில் அவர் மறைந்ததால், அந்த தொகுதி காலியாக இருந்தது.

கடந்த 5-ந் தேதி இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. ரகுராஜ் சிங் ஷாக்யா போட்டியிட்டார்.

இந்நிலையில் மெயின்புரி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் டிம்பிள் யாதவ் 16 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதே போல், ராம்புர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.