மஞ்சு வாரியர் சொன்ன வார்த்தை.. வெட்கப்பட்ட விஜய்சேதுபதி!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம், வரும் 20-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென் கருணாஸ் ஆகியோர், பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மஞ்சு வாரியர் சொன்ன ஒரு வார்த்தை, விஜய்சேதுபதியை வெட்கப்பட வைத்துள்ளது. அதாவது, பெண்களுக்கு பிடித்த ரொமாண்டிக் ஹீரோ யார் என்று, கேரள பெண் ரசிகைகளிடம் கேள்வி கேட்கப்பட்டதாம்.

இதற்கு, அதிகப்படியான பெண்கள், விஜய்சேதுபதிக்கு வாக்கு செலுத்தியுள்ளார்களாம். இதுதொடர்பான தகவலை, அந்த பேட்டியில், மஞ்சு வாரியர் கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய்சேதுபதி, தனக்கு வெட்கமாக உள்ளது என்று, கூறினார். இதுதொடர்பான வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News