Connect with us

Raj News Tamil

வசூலில் சாதனை படைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்..உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்..உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் வெளியானது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மஞ்சுமெல் பாய்ஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் மஞ்சுமெல் பாய்ஸ் உலக அளவில் ரூ.62 கோடி வசூல் செய்துள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இனி வரும் நாட்களில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

More in சினிமா

To Top