Connect with us

Raj News Tamil

அபார சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்! இத்தனை கோடி வசூலா?

சினிமா

அபார சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்! இத்தனை கோடி வசூலா?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்காணல் பகுதிக்கு, கடந்த 2006-ஆம் ஆண்டு அன்று, நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலா சென்றது.

தடை செய்யப்பட்ட குணா குகையின் உள்ளே அந்த குழு சென்றபோது, நண்பர்கள் குழுவில் இருந்த ஒருவர் உள்ளே விழுந்துள்ளார். பின்னர், தன் நண்பர்களின் விடாமுயற்சியின் மூலம், அந்த நபர் காப்பாற்றப்பட்டார்.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மொல் பாய்ஸ் என்ற திரைப்படம், தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, இப்படம் 17 நாட்களில் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த சாதனை மட்டுமின்றி, மிக விரைவிலேயே 100 கோடி வசூலை ஈட்டிய மலையாள படங்களில், இது முதலிடத்தை பெற்றுள்ளது.

More in சினிமா

To Top