Connect with us

Raj News Tamil

மஞ்சுமெல் பாய்ஸின் OTT வியாபாரம் இவ்வளவு தானா? ஒதுக்கும் நிறுவனங்கள்!

சினிமா

மஞ்சுமெல் பாய்ஸின் OTT வியாபாரம் இவ்வளவு தானா? ஒதுக்கும் நிறுவனங்கள்!

மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம், சமீபத்தில் வெளியானது. கேரளாவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், இதுவரை 130 கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை, 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, படக்குழுவினர் ஆர்வம் காட்டியுள்ளார்களாம்.

ஆனால், ஓடிடி நிறுவனங்கள் வெறும் 10 கோடி ரூபாய்க்கு மட்டுமே அப்படத்தை வாங்க பேரம் பேசுகின்றார்களாம். பெரிய வெற்றியை பெற்ற படத்திற்கே, இந்த நிலைமையா என்று படத்தின் தயாரிப்பாளர் வேதனை அடைந்துள்ளாராம்.

More in சினிமா

To Top