தகனம் செய்யப்பட்டது மன்மோகன் சிங் உடல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மன்மோகன் சிங். இந்திய நாட்டிற்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்த இவர், இந்தியா பொருளாதாரத்தை சீரமைத்தவராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இவரது உடலுக்கு இன்று, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர், இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இவரது உடலுக்கு அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து இறுதி சடங்குகளும் நடத்தப்பட்டு, அவரது உடல் தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News