பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான மன்னாரா சோப்ரா என்பவர், தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது, இயக்குநர் ரவிகுமார் சௌத்ரி, நடிகை மன்னாரா சோப்ராவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டார்.
இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நடிகை மன்னாரா சோப்ரா, விமான நிலையம் ஒன்றில், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இயக்குநர் முத்தம் கொடுத்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ரவிகுமார் முத்தம் கொடுப்பார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. அவர் Excitement-ல் அப்படி செய்துவிட்டார். ஆனால், தவறான எண்ணத்தில் இதுமாதிரி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.