தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மன்சூர் அலிகான். இவர், தற்போது விஜயின் லியோ திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், லியோ திரைப்படத்தில், இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
பின்னர், சஸ்பென்ஸை உடைத்துவிட்டோம் என்பதை புரிந்துக் கொண்டு, “ஐயயோ லியோ பற்றி எதையும் கேட்காதீங்கப்பா” என்று தொகுப்பாளரிடம் கூறினார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.