தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் இடம்பெற்ற நா ரெடி தான் என்ற பாடல், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடலை கேட்டதால், இப்படத்தில் நடித்துள்ள மன்சூர் அலிகான் பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது, காரில் பயணம் செய்தபோது, சீட் பெல்ட் அணியாமல், இந்த பாடலை அவர் கேட்டுள்ளார்.
இதனை வீடியோவாகவும் எடுத்து, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சீட் பெல்ட் அணியாமல் உள்ளதால், மன்சூர் அலிகானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.