“எப்படி பேசணும்-னு மன்சூர் அலிகான் தெரிஞ்சுக்கணும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நடிகை த்ரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியிருந்தார். இவரது இந்த பேட்டி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடிகை குஷ்பு, சிரஞ்சீவி, த்ரிஷா என்று பல்வேறு தரப்பினர், மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு அதிகமானதைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், தொடர்ந்து பிரச்சனையை வளர்த்த மன்சூர் அலிகான், குஷ்பு, சிரஞ்சீவி, த்ரிஷா ஆகியோர் மீது, மனநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நிதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, இவ்வாறு பேசியதற்காக, த்ரிஷா தான், மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும், தவறு செய்யவில்லை என்று கூறும் மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் எதற்காக மன்னிப்பு கோரினார் என்றும், விளாசித் தள்ளினார்.

மேலும், மன்சூர் அலிகானின் மனு குறித்து, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு, வரும் டிசம்பர் 22-ஆம் தேதிக்கு, விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News