பல பேரின் முகங்கள் நொறுங்கிய நிலையில் இருந்தது..விபத்தில் உயிர் பிழைத்த நபர் பேட்டி

பெங்களூருவிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வர, தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மீட்பு பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்த நபர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று இரவு கண் அயர்ந்து நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தேன். ரயில்கள் மோதி பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் கண்விழித்து பார்க்கும் போது என் மீது 10-15 பேர் விழுந்துவிட்டனர். என் கைகள், கழுத்து மற்றும் தோள்களில் நிறைய வலி ஏற்பட்டது. வெளியே வந்து பார்த்த போது கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பல உடல்கள் கிடந்தது. பல பேரின் முகங்கள் நொறுங்கிய நிலையில் இருந்தது என அவர் பேட்டி அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News