காரைக்குடி அருகே, தனியார் அமைப்புகள் சார்பில், மாராத்தான் போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில், மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாணவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், துணை மாவட்ட ஆட்சியர் ஆயுஸ் வெங்கட், அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ரவி, காவல்துறை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும், தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.