இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று விஜயின் லியோ.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரைக்கு வர இருப்பதால், மற்ற திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி அன்று, மார்கழி திங்கள் வரும் சிறிய பட்ஜெட் திரைப்படம் ஒன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.
மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, இயக்குநர் சுசீந்திரன் தயாரித்துள்ளார்.
லியோ படமே ஒட்டுமொத்த திரையரங்கையும் நிரப்பிக் கொண்டுள்ள நிலையில், இப்படத்திற்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகமும், இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பார்ப்பார்களா? என்ற சந்தேகமும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.