தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் ஒன்றில் நடித்து பிரபலம் அடைந்தவர் மாரிமுத்து.
இந்த தொடரின் டப்பிங் பணியில் இன்று ஈடுபட்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், இரங்கல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கான் நியுஸ் என்ற Youtube சேனலில், 4 நாட்களுக்கு முன்பாகவே, மாரிமுத்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதர்ச்சையாக வெளியிடப்பட்ட இந்த பொய் செய்தி, தற்போது உண்மையாகிவிட்டதே என்று, ரசிகர்கள் சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.