பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவையே புரட்டி போட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து, நடிகர் தனுஷ் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.
அப்படி உருவான கர்ணன் திரைப்படமும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரண்டு படங்கள் மூலம், நல்ல மதிப்பை பெற்ற மாரி செல்வராஜ், அடுத்த யாருடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், நடிகர் உதயநிதியை வைத்து, மாமன்னன் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படமும், வழக்கம் போல் சாதிய அரசியலை பேசி, ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு, மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், உங்களுடைய சாதியை சேர்ந்தவர்களுக்கு, அதிகம் வாய்ப்பு தருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு, உங்கள் மீது சுமத்தப்படுகிறதே என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
“என்னை அதிகமாக எரிச்சலூட்டும் கேள்விகளில் இதுவும் ஒன்று. நான் சினிமாதுறைக்கு யாருடைய துணையும் இல்லாமல் வந்தேன்.
15 வருடங்கள் கஷ்டப்பட்டேன். தற்போது, ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளேன். இப்போது, என்னை நம்பி, சிலர் உதவி கேட்டு வருகிறார்கள்.
அவர்களை நான் எப்படி நிராகரிக்க முடியும். யாராவது ஒருசிலருக்கு நான் வாய்ப்புகளையும் வழங்கி உள்ளேன். நான் முட்டி மோதி சினிமாவுக்குள் வந்ததைபோல், அவர்களும் வர வேண்டிய கட்டாயம் இல்லை.”
இவ்வாறு தனது பதிலை அளித்துள்ளார்.