மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், இதுவரை 60 கோடி ரூபாய் வரை, வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாரி செல்வராஜ், அங்கிருந்தோரிடம் உரையாற்றினார்.
அப்போது, தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் தோன்றியது என்று தெரிவித்தார்.மேலும், ஒருமுறை தற்கொலை செய்ய முற்பட்டபோது, வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டு, அந்த முடிவை கைவிட்டேன் என்றும் தெரிவித்தார்.