பரியேறும் பெருமாள் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே பலரது மனதை வென்ற இவர், தற்போது பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இவர் இயக்க உள்ளாராம். இந்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, தனுஷின் படத்தை முடித்த பிறகு, கார்த்தியுடன், அவர் கூட்டணி வைக்க உள்ளாராம். இந்த படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினியுடன் அவர் கூட்டணி வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.