மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மாரிமுத்து உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(30). இவருக்கு ஷீபா என்ற மனைவியும், 5 வயது மகனும் உள்ளனர்.

இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் கர்ணன் படத்திலும் நடிகராக அறிமுகமானார். மாமன்னன் மற்றும் வாழை உள்ளிட்ட படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதை தொடர்ந்து தனியாக கதை எழுதி படம் இயக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகமாக சிகெரட் பிடிக்கும் பழக்கம் இருந்த மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News