பரியேறும் பெருமாள் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய தொடர் வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து, பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாரி செல்வராஜ் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், “கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே, கீழே என்று இழிவாக காட்டக் கூடாது என நான் செய்த செயல், இன்றைய தமிழ் சினிமாவில் மற்ற இயக்குநர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளது” என்று கூறினார்.