த்ரிஷா இல்லைனா நயன்தாரா, AAA, பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படங்களுக்கு பிறகு, மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் 15-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சென்சார் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த படத்தில் இடம்பெற்ற ஆபாசமான வசனங்கள், 11 இடங்களில் Mute செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இப்படத்தில் இவ்வளவு ஆபாசமான வசனங்களா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.