விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள், வயிறு குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை என்று கமர்ஷியல் படங்களுக்கு உண்டான அம்சங்கள், சரியான விகிதத்தில் இருந்ததால், இந்த திரைப்படம், நல்ல வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 5 நாட்களில், உலகம் முழுவதும், 62.11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன், எனிமி, வீரமே வாகை சூடும் என்று தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு, இது மிகப்பெரிய கம்பேக்காக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.