த்ரிஷா இல்லைனா நயன்தாரா, AAA, பஹீரா ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தை இன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்துக்களை Youtube-ல் கூறி வருகின்றனர்.
அதனை வைத்து பார்க்கும்போது, படம் அருமையாக உள்ளது என்றும், பல்வேறு இடங்களில் செம காமெடியாக உள்ளது என்றும் தெரிகிறது.
ஒருசிலர் மட்டும், திரைப்படம் சுமாரா உள்ளது என்று சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று தெரியவந்துள்ளது.