ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. டைம் டிராவல், ஆக்சன் த்ரில்லர், கேங்ஸ்டர் என பல்வேறு ஜானரில் இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் ஓடிடி உரிமைக்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்துள்ளது.
இறுதியில், அமேசான் ப்ரைம் நிறுவனம் மார்க் ஆண்டனியின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.
விஷாலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.