உத்திரமேரூர் அருகே உலக நன்மை வேண்டி மரங்களுக்கு திருமணம்

உத்திரமேரூர் அருகே உள்ள காரணைமண்டபம் என்ற கிராமத்தில் பழமையான கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் ஒன்று சுயம்புவாக தோன்றி தானாக வளரத் தொடங்கியது. இதனை கிராம மக்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் வழிபடத் தொடங்கினர்.

இந்நிலையில் உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. இந்த அழைப்பிதழ் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது.

tamil news latest

அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரும் வழிபட்டனர். திருமணத்துக்கு வந்திருந்த கிராம மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கப்பட்டு தாம்பூலப்பை வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News