தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கருத்துக்களை பரப்புவதற்காக பிஜேபியின் கை கூலியாக செயல்பட்டு வருகின்றார் என்றும் பல்வேறு காரணங்காளால் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக கவர்னர் வருகை தந்துள்ளார்.
பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு கார்ல் மார்க்ஸ் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி அவதூரான கருத்துக்களை பரப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சுமார் 50-க்கும் மேற்ப்பட்டோர் கருப்பு கொடியுடன் போரட்டத்தில் குதித்தனர். இதையடுத்து ஏராளமான போலிஸ் குவிக்கப்பட்டு, கூட்டத்தை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலிசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிசென்ற கைது சென்றனர். இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.