அதிகரிக்கும் கொரோனா பரவல்.. மாஸ்க் கட்டாயம்.. கட்டுப்பாடுகளை தொடங்கிய தமிழக அரசு!

கொரோனா வைரசின் பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அதன் திரிபு வைரஸ் மிகுந்த வலிமையுடன், மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கு, இப்போதில் இருந்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேடு மார்கெட்டில், வியாபாரிகளும், பொதுமக்களும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.