வங்கிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் – ரூ.18.85 கோடி கொள்ளை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மாலை 10 பேர் அடங்கிய கும்பல் முகமூடி அணிந்த படி பயங்கர ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களையும் வங்கி ஊழியர்களையும் தாக்கி கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். இதையடுத்து வங்கி மேலாளரை மட்டும் துப்பாக்கி முனையில் மிரட்டி, லாக்கரை திறக்கச் செய்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ரூ.18.85 கோடியை அவர்கள் கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News