பெண்களுக்கான பாதுகாப்பு என்பது, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சிறுமி முதல் முதியவர் வரை, அனைத்து வயதுடைய பெண்களும், பாதுகாப்பற்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர். குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் தான், இதுபோன்ற சம்பவங்களில், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனை ஒழிக்க பல்வேறு முயற்சிகள், அரசு சார்பில் எடுக்கப்பட்டும், குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர், மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த மசாஜ் சென்டருக்கு, ரவீந்திர ஷெட்டி என்ற வாடிக்கையாளர், அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், சம்பவத்தன்றும், அவர் வந்திருக்கிறார். அப்போது, அந்த இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த ரவீந்திர ஷெட்டி, அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
ரவீந்திர ஷெட்டிக்கு பயந்து, தனக்கு நடந்த வேதனைகளை வெளியில் சொல்லாத அந்த பெண், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர், அவரிடம் கேட்டதற்கு, நடந்தவற்றை கூறி, கதறி அழுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரவீந்திர ஷெட்டியை கைது செய்தனர்.