டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வு சில நிமிடங்களுக்கு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஒரு நில அதிர்வு, அடுத்த சில வினாடிகள் கழித்து மற்றொரு நில அதிர்வு என இரண்டுமே வலுவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.