ஜப்பானிலும் மாஸ் காட்டும் தளபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக, பெரும் வசூல் சாதனை செய்துள்ள இவர், இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தளபதி விஜய், ஜப்பான் நாட்டிலும் கெத்து காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம், தற்போது ஜப்பான் நாட்டில், வரும் நவம்பர் 18-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங் என்று அப்படத்திற்கு அந்நாட்டில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அந்நாட்டிலும், பெரும் வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.