மண்டேலா படத்தின் வெற்றிக்கு பிறகு, மடோன் அஸ்வீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், சிவகார்த்திகேயன் செம மாஸாக நடனம் ஆடியுள்ளார். மேலும், இந்த ஃபர்ஸ்ட் சிங்கில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய படமான பிரின்ஸ் படுதோல்வி அடைந்ததால், இந்த படம் வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்தில், சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.