இருளில் மூழ்கிய மயிலாடுதுறை: பொது மக்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை அருகே 12 மணி நேரம் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், கடுவங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கடுவங்குடி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் கொடுக்கப்பட்ட நிலையில் நீடூர் கிராமத்திற்கு மட்டும் இரவு 10 மணி வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட கேட்ட போது, எந்த பதிலும் முறையாக கூறவில்லை என தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் பொதுமக்களிடயே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.