நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய இயல்பான காமெடி நடிப்பாலும், மிமிக்கிரியாலும் ரசிகர்களை மனதை கட்டிப்போட்டவர். நல்ல நடிகன் மட்டுமில்லாது பிறருக்கு உதவும் குணத்தாலும் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர்.

இந்த நிலையில் தன்னுடைய இறப்பு குறித்து திரைப்பட விழா ஒன்றில், மயில்சாமி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை கிடையாது, ஆனால் உயிருடன் இருக்கும் வரை உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.